பெரியாரை ஏன் புறக்கணித்தீர்கள் இந்தியப் பெண்களே ???
பெரும்பாலான இந்தியப் பெண்கள் பெரியாரை, மத வெறுப்பாளரென்று புறக்கணித்ததின் பின்விளைவுதான், இன்னமும் என்னைப் போன்றவர்களெல்லாம் பெண்ணின ஆதவாளர் என வேடம் தரிக்க வைக்கிறது. உண்மையில், பெண்கள் விடுதலை சார்பாக ஆண்கள் குரல் கொடுப்பதை பெரியார் பெரிதும் பகடி செய்கிறார். அது :- எலிகளுக்கு பூனை ஆதரவு தெரிவிப்பதைப் போல கோழிகளுக்கு நரிகள் பச்சாதாபம் கொள்வதைப் போல ஆடுகளுக்கு ஓநாய்கள் அழுவைதைப் போல....என்கிறார். ஆமாம், பெண் விடுதலை ஏன், எதற்கு, என்ன என்பதை பெண்கள்தான் முன்னெடுத்துக் கேட்டுப் பெற வேண்டும், மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், பழம் பொன்மொழிகளின் பெயரால் அதைத் தடுக்க முயல்பவர்களை, பெருஞ் சீற்றம் கொண்டெழுந்து முடக்க வேண்டும். அப்படிக் கிட்டும் விடுதலையே, வெற்றியே நிரந்தரமானது. அன்றி, ஆண்கள் உங்களுக்காகப் பரிந்துப் பேசி பெற்றுத்தரும் சலுகைகளானது தற்காலிகமானது, உங்களை கற்பின் பெயரால் அடிமைப்படுத்த நினைக்கும் ஆண்களின் பசுத்தோல் போர்த்திய புலி வேடமது ! (இக்கால ஆண்கள் இதை வாசித்துக் கோபம் கொள்ள வேண்டாம், 20ம் நூற்றாண்டுகளின் ஆரம்பத்தில், பெரியார் மதத்தின் பெயரால்(குறிப...