தேர்தல் முடிவுகள் தரும் த்ரில் !!!
பாட்டியும், அம்மாவும் சேர்ந்துச் சொன்ன தேர்தல் கதைகள் ! ============================================== அச்சு அசலாக இன்றைய தினம் போலவே 1967 சட்டசபைத் தேர்தலுக்குப் பின், “ காங்கிரஸ் முதலாளிகளின் ஆட்சி இறங்கப்போகிறது, ரூபாய்க்கு மூன்று படி அல்லது ஒரு படியாவது அரிசி கிட்டிவிடும்” என்கிற பெருமகிழ்ச்சியில், வால்வு செட் ரேடியோ பெட்டி அருகே விடியலுக்காக காத்துக் கிடந்திருக்கிறார்கள் தமிழகத்தின் பெரும்பாலான மக்கள். அப்போதைய செண்டிமென்ட் படி(இப்போதும் எப்போதும் கூட) ”முதல் செய்தியில் எந்தக் கட்சி அதிக இடங்களில் முன்னிலை என்கிறார்களோ அவர்களே முழு வெற்றி பெறுவார்கள்” அதன்படியே முதன்முறையாக 1967ல் தமிழகத்தை ஆள்வதிலிருந்து காங்கிரஸ்க்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. இனி நாமாக அழைத்தால் கூட ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவளிப்பார்களேயன்றி என்றுமே தமிழகத்தை அவர்களால் ஆள முடியாது :) ஆல் இந்தியா ஆகாஷ்வாணியில் அண்ணாதுரை தலைமையிலான திமுக பலப்பல இடங்களிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை என்று முதல்சுற்று தேர்தல் முடிவுச் செய்திகளில் சொல்லியிருக்கிறார்கள். காங்கிரஸ்க்கு மட்...