மழையின் குரல் தனிமை
தற்கொலை என்றவுடனே எனக்கு பத்திக்கொண்டு கோபம் கிளம்பும். தற்கொலை செய்துக்கொண்டோரை வடிகட்டிய மா கோழைகள் என மனதுள் திட்டுவேன். ஆனால் பல தற்கொலைகளின் வரலாற்றை ஆய்ந்தபோது, செய்துகொண்டவர்களின் கையறு நிலையிலேயே அவைகள் நிகழ்ந்திருக்கின்றன என்பதுதான் கொடுஞ்சோகம். அதுவும் அப்படி நமக்கு நெருக்கமானவர்களுக்கிடையே அவைகள் நிகழும்போதுதான்.......’அய்யோ இப்படி ஆகுமெனத் தெரிந்திருந்தால் இயன்றவரை உதவியிருக்கலாமே ?’ எனக் கண்ணீர் முட்டும். என்ன முட்டி என்ன.....போனது அவ்வளவுதான். ஆனால் அந்த உயிரை நம்பி, நேசித்திருந்து, அவர்களில்லாமல்........ஜீவிக்கப் போகிறவர்களின் நிலை ? அட அது கூடப் போகட்டும். இப்படி ஓர் உயிரின் அகால மரணத்திற்கு துர்விதியால் அல்லது தெரிந்தே..... காரணமாய் இருப்பவரின் கதி ??? ஆம், அதுதான் கீழே தொடரப்போகும் கதை(மதிப்புரை அல்லது தெளிவுரை)யின் மையக்கரு. ’மழையின் குரல் தனிமை’ ஆசிரியர் பா.வெங்கடேசன். சிறுகதையாக காலச்சுவடு சிற்றிதழில் வெளியானது. சிறுகதைன்னா இதுவும் ராஜன் மகள் போலவே நீளமானச் சிறுகதைதான்(40 பக்கங்கள்) வ...