கெட்ட வார்த்தை பேசுவோம் !!!
கெட்ட வார்த்தை பேசுவோம் - பெருமாள்முருகன் ******************************************************************** ஒரு வருடமாய் அலமாரியில் தூசி படிந்து , புது புத்தகத்திற்குரிய வாசனையை கிட்டத்தட்ட இழந்திருந்த இந் நூலை , சமீபத்தில் சென்றிருந்த பிஸினெஸ் டூரில் , ரயில் பயணவேளைகளின் போது வாசித்தேன் . வாசிக்க ஆரம்பித்தவுடன் அசூயையின் காரணமாக முகம் சுளித்து அவதிப்பட்டேன் . அல்குல் , கொங்கை , சிதி , சுண்ணி என தொடர்ந்து பத்திக்கு பத்தி கவுச்சி . அய்யய்யோ , இந்தப் புத்தகத்தைப் போய் திறந்தவெளியில் வைத்திருந்தோமே , வீட்டுப் பெண்மணிகள் எதேச்சையாய் வாசித்து நம்மைப் பற்றி என்ன நினைத்திருப்பார்களோ என்ற கிலி வேறு பற்றியது. பெருமாள்முருகனே ஆரம்பத்தில் , சொந்தப் பெயரை மறைத்து , புனைப் பெயரில்தான் இதைத் தொடராக எழுதினாராம் ! ஆனால் , இந்த நூலை முழுதாய் வாசித்ததும் , செக்ஸ் & ஆண் பெண் பாலியல் உறுப்புகள் பற்றி பேசும் போதோ , எழுதும் போதோ , வாசிக்கும் போதோ , நாம் போடும் போலி வேஷங்களையும் , நம் பண்டைய இலக்கியவாதிகளின் சுதந்திரத்தையும் ஒப்பிட்டபோது , இயல்பை , அவசியமான ஒன்றை , இப்படி மூடிப் பேசி மூடி...