உபதேசமொன்று !!!



'வெறிநாய்த் தொல்லை அதிகமாகிவிட்டதே ?’
வினவியது அண்டைவீட்டு ஷேக்முகமதுவிடம்..

'என்ன செய்ய, அதற்கேன் அது பிடித்ததென
நீதான் சிந்திப்பதேயில்லையே.. ?’

'ஏனாம் ?’
என்றேன் நான்

'ஓயாமல் அதன்மீது கல்லெறிந்து விளையாடிய பாலகர்களை தடுத்ததுண்டா நீ ?’

சுருக்கென்று வலிக்க, மிஷ்கின் கதாபாத்திரமாய் தலைகவிழ்த்தேன். 
'இப்ப நான் என்ன செய்ய ?’

'வா....அது கடித்து இன்னும் பல
நாய்களுக்கும் வெறியேறிவிடாமல்
தடுக்க அதைச் சமாதானம் செய்வோம் !’

தலை நீவ ஆர்வத்தோடு முதலில் போன
என் கையை கடித்ததது !

தன்னை நோக்கிப் பாய்ந்த அதைப் பயமுறுத்த
கல்லைத் தேடிக்கொண்டிருந்தான் ஷேக் முகமது !!!






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!