உருக்கமான வாசகி கடிதம்
அன்புள்ள சாரு, நான் உங்களின் தீவிர வாசகி. தனியறையில் பலமுறை, ஸீரோ டிகிரியின் இறுதிப் பக்கங்களில் வரும் கவிதைகளை வாசித்து கதறியழுதிருக்கிறேன். ஒருமுறை மறந்துபோய் ஹாலில் வைத்து வாசித்துவிட்டேன். ”ஏம்மா ரபியா அழுற ?” ன்னு ஒரு முரட்டு குரல். வாப்பா. அப்போதுதான் எனக்கு நினைவே வந்தது, நான் ஹாலில் அமர்ந்து உங்கள் நாவலை வாசித்துவிட்டேன் என்று. அந்தளவு என்னை உருக்கியெடுத்த நாவல் அது. ’உங்களைப் போலவே இவரும் எனக்கு வாப்பாதாம்ப்பா’ என்று அந்த நாவலின் பின்னட்டையிலிருந்த உங்கள் போட்டோவைக் காட்டினேன் என் வாப்பாவிடம். ஸீரோ டிகிரி முடித்தபின், உங்களின் எல்லா நாவல்களையும் வாங்கி வாசித்தேன், அவ்வப்போது அந் நாவல்கள் பற்றியெழுதி, உங்களுக்கு மெயில்களும் அனுப்பிவைத்திருக்கிறேன். உங்கள் ஆன்லைனை ஒருநாள் விடாமல் வாசிப்பேன். நீங்கள் ஆன்லைனில் எழுதாமல் விட்ட நாட்களெல்லாம் எனக்கு கிட்டிய தண்டனைகளாகவே கருதுவேன், அன்று முழுக்க என் முகத்தில் சோகம் வழிந்தோடும். உம்மா, ’என்னடி உங்க வாப்பா இன்னிக்கு ஏதும் எழுதல போல ?’ என்று எளிதாக கண்டுபிடிப்பது போ...