இடுகைகள்

பிப்ரவரி, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மரப்பசு - தி .ஜானகிராமன் ( நாவல் மதிப்புரை)

படம்
மரப்பசு - தி. ஜானகிராமன். இந்த க்ளாஸிக் நாவலுக்கு என் விமர்சனமென்பது அவசியமேயில்லாத ஒன்று.  ஆனால் 'சாரு நிவேதிதா'வை, 'பாலகுமார'னை ஆதர்ஸங்களாகக் கொண்டு, அவர்களை தெய்வங்களாக்கி அபிஷேகங்கள் செய்யும் ’தாஸர்கள்’ அவசியம் இந் நாவலை வாசிக்க வேண்டும். நூறு பாலச்சந்தர், இரு நூறு பாலகுமாரன், முன்னூறு சாரு நிவேதிதாவிற்கு இணையாய் பேராளுமை புரிந்திருக்கிறார் தி.ஜா.   இப்படி ஒரு பெண்ணைப் பற்றியெழுத அக்காலத்தில் நிச்சயம் பெருந்துணிவு வேண்டும். 20 வயது ’அம்மணி’ தாமாகவே முன்வந்து கதை சொல்ல ஆரம்பிக்கிறாள்.  எடுத்தவுடனே நொடிக்குள் நூறு கிலோமீட்டரைத் தொட்டாற் போல் பரவசமான வரிகள்.  வீட்டில் பிணமாய்க் கிடத்தப்பட்டிருக்கும் சித்தப்பாவைப் பார்த்து அவளுக்குச் சிரிப்பு வருகிறது.  கணவனை இழந்த துயர் தாளாது அழும் சித்தி, அம்மணியின் கண்களுக்கு கோமாளியாய்த் தெரிகிறாள்.  சித்தியைக் கட்டிக்கொண்டு அழும் தொண்டு கிழங்களின் அங்க சேஷ்டைகள்  அவளை ROFL செய்யத் தூண்டுகிறது. அம்மணியின் அம்மா தலையிலடித்துக் கொள்கிறாள், “என் வயித்துலன்னு வந்து பொறந்தீயே ?” அம்மணியின் கையைப் பற்றித...

வறுமையின் நிறம் பச்சை !!!

கவிதை எழுதிவிடுவதென ஒருமனதாய் முடிவெடுத்து சிலந்தி கட்டியிருந்த வலைகளொதுக்கி எண்ணத்தை சுத்தம் செய்தேன் ! என்ன கசக்கியும் மானே தேனேவைத் தாண்டி வார்த்தைகள் வாய்க்கவேயில்லை வசப்படவுமில்லை ! கவிபுனையு மாசையைக் கொன்றுவிட்டு காரணம் தேடி கண்ணாடி நோக்கிப் போய் அதிர்ந்து பின்வாங்கினேன் எங்கெங்கும் சுண்ணாம்பு ! மேலுதட்டின் மேல் சுண்ணாம்பு கிருதாக்களில் சுண்ணாம்பு கன்னங்களில் சுண்ணாம்பு தலைமுழுக்க சுண்ணாம்பு ! சுண்ணாம்புக்கும் காதல்கவிதை வரைவதற்கும் என்னய்யா தொடர்பு ? மனசுமா சுண்ணாம்பாகி விட்டது ? இல்லைதான்.....ஆனால்....... மோதி விளையாட விழிகளுமில்லை கள்ளமாய் ரசிக்கும் தோழிகளுமில்லை அங்கிள் அண்ணாவென்றழைக்காத பெண்களே எனக்கில்லை ! காதலியிடம் வாட்ஸப்பிக் கொண்டிருந்த நண்பனின் பச்சை சட்டையை கடன் வாங்கி பஸ்ஸ்டாப்பில் எனக்கான தேவதையைத் தேடி தேய்வழக்காய் காத்துக்கிடக்கிறேன் !!! சமர்ப்பணம் : காதல் வறுமை பீடித்த முதிர்கன்னர்களுக்கு ;) காதலர்தின ஸ்பெஷல் கவிதை ;)