வறுமையின் நிறம் பச்சை !!!

கவிதை எழுதிவிடுவதென
ஒருமனதாய் முடிவெடுத்து
சிலந்தி கட்டியிருந்த வலைகளொதுக்கி
எண்ணத்தை சுத்தம் செய்தேன் !

என்ன கசக்கியும்
மானே தேனேவைத் தாண்டி
வார்த்தைகள் வாய்க்கவேயில்லை
வசப்படவுமில்லை !

கவிபுனையு மாசையைக் கொன்றுவிட்டு
காரணம் தேடி கண்ணாடி நோக்கிப் போய்
அதிர்ந்து பின்வாங்கினேன்
எங்கெங்கும் சுண்ணாம்பு !

மேலுதட்டின் மேல் சுண்ணாம்பு
கிருதாக்களில் சுண்ணாம்பு
கன்னங்களில் சுண்ணாம்பு
தலைமுழுக்க சுண்ணாம்பு !

சுண்ணாம்புக்கும்
காதல்கவிதை வரைவதற்கும்
என்னய்யா தொடர்பு ?
மனசுமா சுண்ணாம்பாகி விட்டது ?

இல்லைதான்.....ஆனால்.......
மோதி விளையாட விழிகளுமில்லை
கள்ளமாய் ரசிக்கும் தோழிகளுமில்லை
அங்கிள் அண்ணாவென்றழைக்காத பெண்களே எனக்கில்லை !

காதலியிடம் வாட்ஸப்பிக் கொண்டிருந்த
நண்பனின் பச்சை சட்டையை கடன் வாங்கி
பஸ்ஸ்டாப்பில் எனக்கான தேவதையைத் தேடி
தேய்வழக்காய் காத்துக்கிடக்கிறேன் !!!



சமர்ப்பணம் : காதல் வறுமை பீடித்த முதிர்கன்னர்களுக்கு ;)

காதலர்தின ஸ்பெஷல் கவிதை ;) 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!