பெரியாரின் அதிர்ச்சி வைத்தியம்
ஒரு சிறு குழப்பத்தைத் தீர்த்துக் கொள்வோம். என்னதான் பெரியார் விரும்பியாக இருந்தாலும், இந்தத் தாலி அகற்றும் சடங்கெல்லாம் தேவையில்லாதது என்பதில் எனக்கெந்த மாற்றுக் கருத்துமேயில்லை. பிறகேன் இவர்கள்(திராவிட கழகத்தினர்) இதை வலுக்கட்டாயமாக செய்கின்றனர் என்றால் பெரியாரின் அதிர்ச்சி வைத்திய முறை இதுதானாம் ! இப்போதைக்கு இவர்களுக்கு வேறு தொழில் இல்லையென்பதும் மறுக்க முடியாத உண்மை. அந்தக்காலத்தில் ஏதுமறியா அப்பாவிகளை மனு தர்மம், ஸாண்டில்ய சாஸ்திரம், வேதங்களையெல்லாம் மேற்கோள் காட்டி பயங்காட்டிப் பார்த்த ஒரு சில இனங்களின் தோலுரிக்க பெரியார் மேற்கொண்டதுதான் பல அதிர்ச்சி முறைகள். முதலில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சுய மரியாதை அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். திருமணங்களிலும் தேவையற்ற சடங்குகள் எதுவுமே தேவையில்லை, எந்தப் பண்டிதர்களின் உதவியேயில்லாமல் நம் திருமணங்களை நடத்திக் கொள்ள வேண்டுமென்றுதான் அவர் சுய மரியாதை திருமணங்களை ஊக்குவித்தார். அப்படிப்பட்ட நிறைய திருமணங்களை நடத்தியும் வைத்தார். ...