முடக்காதே.....முடக்காதே !
நம் இயல்பை, இந்த ஊடகங்கள் எவ்வாறெல்லாம் கட்டுப்படுத்தி, முன்னேறவிடாமல் முடக்கி விட்டிருக்கின்றன என்பதற்கு கீழே தொடரும் பத்தியே சான்று.
// சீன குத்துச்சண்டை :
வெள்ளியை உறுதி செய்தார் மன்ஜீத் சிங்

சீன ஓபன் குத்துச்சண்டை போட்டியில், இந்தியாவின் மன்ஜீத் சிங் 91 கிலோவுக்கு மேற்பட்டோர்க்கான எடைப்பிரிவு அரைஇறுதியில் சீனாவின் வாங் ஜீ பாவை வீழ்த்தி, இறுதிச் சுற்றை உறுதி செய்தார். சனிக்கிழமை நடைபெறும் இறுதிச் சுற்றில், சீனாவின் அகிப்பீர் யூசுப்பைச் சந்திக்கிறார் //
ஆம், நமக்கு வெள்ளி கிடைத்தால் கூடப் போதுமாம்.
வெள்ளி வாங்கிவிட்டாலே பெருமையாம்.
இரண்டாமிடம் ஒன்றுமில்லாததற்கு பரவாயில்லையாம்.

அட, இதையே ’தங்கம் வெல்வாரா மன்ஜீத் சிங் ?’
அல்லது ’மன்ஜீத் சிங் தங்கம் வெல்ல வாய்ப்பு’ என்று எழுதினால் என்னவாம் ?
அப்படி எழுதி, அவர் தோற்றுவிட்டால் நாம் ஏமாந்து விடுவோமாம். ஏமாறாமல், மனம் துவண்டு போகாமல் இருக்க இப்படி ஒரு உத்தியாம்.
முதலிடம் கிட்டாமல் இரண்டாமிடம் கிட்டி அழுபவனை வேண்டுமானால் ’தங்கம் இல்லை என்றாலென்ன வெள்ளி மோசமில்லை’ என்று தேற்றலாம், அதை விடுத்து, தங்கம் வாங்க வாய்ப்புள்ள ஒருவரை, அவர் தங்கம் வாங்கிவிடுவார் என நம்பும் சிலரை, நாங்கள்தான் முதலிடம் பெறப்போகிறோம் என குதூகலிக்கும் பலரை, எப்படியெல்லாம் மட்டுப் படுத்தி வைக்கிறார்கள் ?
ஒரே ஒரு ஓட்டில் ஜெயித்தாலும், ஜெயித்தவனுக்குத்தானேயய்யா பெருமை ? ஒரே ஒரு ஓட்டில் தோற்றார் என்பதற்காக, ஜெயித்தவருக்கு கிட்டும் பாதி சலுகையை இரண்டாமிடம் பெறுபவனுக்கு கொடுக்கிறார்களா என்ன ?
வெள்ளி உறுதியானால்தான் என்ன ? வெண்கலம் கூடை நிறைய கொட்டினால்தான் என்ன ? ’ஆபரேஷன் சக்சஸ் ஆனால் பேஷண்ட் டெட்’ என்பதில், செத்தவனுக்கு என்னய்யா லாபம் ?
’அத்தனைக்கும் ஆசைப்படு’ என்பதும் தவறு, ’கைக்கெட்டியதற்கு கூட ஆசைப்படாதே’ என்பதும் தவறுதான் !!!
=====முற்றுகிறது======

கருத்துகள்
கருத்துரையிடுக