செவ்வாய், 6 மார்ச், 2012

உனக்குத் தேவையா இது ?


(இது என் முகம் நேராய் என் விரலை நீட்டி, நானே என்னைக் கேட்கும் கேள்வி)

     குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் விசு காமெடி யாருக்காவது ஞாபகம் இருக்கிறதாசாப்பிட்டாச்சா...? ன்னு ஒரு கேள்வி கேட்ட கேரக்டர கடிச்சி பிராண்டிடுவாரு, அது மாதிரி ஓர் அனுபவம் FACEBOOK புண்ணியத்தில் நேற்று எனக்கு கிட்டியது

    பிறந்தநாள் வாழ்த்து சொல்வதென்பது ஒரு நாகரீகச்செயல் என நம்பும் இன்னசன்ட் நான்சில சமயங்களில் முகநூலின் முகப்பில் நண்பர்களுடைய பிறந்தநாள் பற்றிய அறிவிப்பு ப்ளிங் ஆகும், நேரமிருந்தால் அல்லது அவர் நெருங்கியவராயிருந்தால் வாழ்த்து ஒன்றை தட்டிவிடுவேன்அப்படித்தான் அன்றைய கொழுத்த ராகுகாலத்தில் ஒரு நண்பருக்கு, பிறந்தநாள் வாழ்த்தை அனுப்பித் தொலைத்தேன்இரண்டுநாள் கழித்து வந்தது பூமராங், அனுப்பி வைத்தவர் நண்பர்தான் !     

// நான் என்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுவதில்லை. பிறந்தநாள் கொண்டாடுவது தமிழர் வழக்கம் அல்ல. ஈழத்தமிழர் படுகிற இன்னல்கள், தமிழ்நாட்டுத் தமிழினம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிற பேரவலம், இதற்கு இடையில் ஒரு எளிய தமிழனின் பிறந்த நாள் ஒரு பொருட்டே அல்ல. இருந்தாலும் எனக்கு வாழ்த்துக் கூறிய நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் //

இப்படியாக அருளுரை போல் இருந்த நண்பரின்  ரிப்ளேவைப் பார்த்து முடிகள் சிலிர்த்தெழுந்தனஇவனல்லவா தமிழன், நானெல்லாம் இவருடைய கால்தூசுக்காவோமாஎன்று மனசு சொன்னாலும், போன சனிப்பெயர்ச்சியில் சனீஸ்வரன் என் மேலேயே தங்கியிருந்ததை, என் விரல்கள் அறிந்திருக்கவில்லைபெரிய அறிவுஜீவி போல் அவருக்கு கீழ்கண்ட பதிலை அனுப்பிவைத்தேன்.

// நண்பா, பிறந்தநாள் கொண்டாடாமல் இருப்பதில்,   ஏதும் பெருமையில்லைமாறாக, மண்டபம் அல்லது மற்ற எதாவது ஈழ அகதிகள் முகாம்களுக்குச் சென்று அவர்களுக்கு உதவி, அதை எங்களுக்கும் சொல்லி எங்களைத் தூண்டலாம், குறைந்தபட்சம் உங்கள் முகநூல் செட்டிங்கில் பிறந்தநாளை யாருக்கும் தெரியாமல் லாக் செய்யலாம் என்றேன் //

       ஆனால் அடுத்து நண்பரிடமிருந்து வந்தது பூமராங் இல்லை
'தானே' புயல் 

// முகநூல் பிறந்தநாள் கொண்டாடுவதற்காக பிறந்த தேதியை நான் போடவில்லை, மேலும் அகதிகளுக்கு உதவித்தான் நான் தமிழன் என நிருபிக்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை, உங்களைப் போன்ற துரோகிகளின் அறிவுரையும் எனக்குத் தேவையில்லை, இன்னும் சொல்லப்போனால் மூடர்களின் தலைவனான உங்கள் வாழ்த்தும் வேண்டாம், நீங்களும் வேண்டாம் //

     இதைக்கண்டதும் என் இதயம் சில வினாடிகள் துடிக்க மறுத்தது, கண்ணில் நீர் பெருகி வழிந்தோட ஆரம்பித்ததுநண்பர்களின் எண்ணிக்கையில் ஓன்று குறைந்தும் போயிருந்தது !
                                                                                                                                
மாரல் ஆப் போஸ்ட் :-  நீ பச்சைத் தமிழன்தான் என்றால் உன் அன்புச் சகோதர்கள் அங்கே வாட நீ இங்கு ஆடாதே,  தூங்காதே, உண்ணாதே, சினிமா, கிரிக்கெட், அதிலும் முக்கியமாய் IPL  பார்க்காதே,  
ETC ...ETC !என் நிலையைக் கண்டு எள்ளி நகைத்த சனிபகவான் மீண்டும் என் தலையில் ஏறி அமர்ந்து தூங்கத் தொடங்கினார் !!!


                         -----     THE END     -----