நடிப்பிலும் நாங்க ஆஸ்கர் வாங்கிடுவுமில்ல !


இது ஏதோ சினிமா கட்டூரை என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள், இந்த விருதை நோக்கி பயணிப்பவர்கள் நம்ம தாய்நாட்டு அரசியல்வாதிகள் ! 


நம்ம நாட்டு நடிகர்கள் கூட ஓவர் ஆக்டிங்  செய்து  வருடாவருடம் சொதப்பிவிட, அரசியல் புலிகளோ, பால் வேறுபாடின்றி  மிகச்சிறப்புற திறமையாக நடித்து வருவதால்,
கூடியவிரைவில், நடிப்பிலும் நமக்கு ஆஸ்கர் 
கிடைக்கும், கிடைத்தபின் ஆடுவோமே,  பள்ளுப்பாடுவோமே !


சரி, நம் அரசியல்வாதிகளில் யாராருக்கு இந்த ஆஸ்கர் கிடைக்க வாய்ப்புள்ளது ?  தி நாமினீஸ் ஆர் - மன்மோகன்ஜி, கருணாநிதிஜி, மம்தாஜி, ஜெயலலிதாஜி, !


முதலில் மன்மோகன்ஜி, இந்த ஜி, சோனியாஜியை  மீறி எதுவுமே  செய்வதில்லை.   1984 ல்  டெல்லியில்  தன் இனமக்களையே   துடிதுடிக்கக் கொன்ற கட்சியில் சுரணையற்று 
சேர்ந்ததாலோ என்னமோ, கண்ணருகே இனஒழிப்பு நடந்துக் கொண்டிருக்க, ஒரு பிரதமராய் கொஞ்சமும் செயல்படாமல்,
அண்டை நாட்டு அட்டூழியங்களை 
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.  
மன்னிக்கவும், கூட சேர்ந்து ஒழித்தழித்தார்  என்பதே சரி.   


கிள்ளிவிட்டு அழும் பிள்ளையை தொட்டிலில் 
இட்டு சமாதானப் படுத்துகிறேன் பேர்வழி என்று
ஹஸ்கி வாய்சில் சோகமாய் இன்று மக்களவையில் நடித்தபடி  
சொல்கிறார், 'ஜெனிவாவில் இலங்கைக்கு 
எதிரான தீர்மானத்தை ஆதரிப்போம்' என்று.
குழந்தையை கழுத்தை இறுக்கி குற்றுயிராய் 
ஆக்கிவிட்டு, நீர் ஆட்டி என்னய்யா  ஆகப்போகிறது, உமக்கு ஐம்பது சதவிகிதம்
வாய்ப்புள்ளதய்யா ஆஸ்கருக்கு !


அடுத்து நம் ஆல்டைம்  பேவரைட் கருணாஜி, 
கலைஞர்  வெறும்  வசனகர்த்தா, அரசியல்வாதி,
என்று  நினைப்பவருக்கு  மட்டும் ஒரு செய்தி,
அன்னார்  அக்காலத்தில்  மேடை நாடகங்களில் 
நடித்தவர்தான்,  அதுவும் சமீப  காலங்களில் இவர் போடும்   உண்ணாவிரத நடிப்பு, மிகவும் பிரசித்தம்.


இலங்கையில் போர் இறுதிக்கட்ட சூழலில்
மிக மிக மோசமான கட்டத்தின்போது   அண்ணா சமாதியில், 'அரைநாள் உண்ணா நோன்பு' நாடகத்தில்  மிகப் பிரமாதமாக  நடித்தார். அதன்பின்பு 'இன்று ஓர்  உண்ணாவிரதப் போர்' என்ற ஒரு  நாடகத்தை அரங்கேற்றப்  போவதாய்
அறிவித்தார்.  ஆனால் முந்திரிக்கொட்டையாய்
பிரதமர், இலங்கைக்கு எதிராய் வாக்களிக்கப் 
போவதாய் அறிவித்ததால், நமக்கு இந்த 
நாடகத்தைப் பார்க்கும் வாய்ப்பில்லாமல் 
போனது, போனாலென்ன நிச்சயம் தாத்தா 
நன்றாகத்தான் நடித்திருப்பார், எனவே, அந்த 
அரைநாளிற்க்கே ஆஸ்கர்  கொடுக்கலாமல்லவா ? தாத்தா உங்களுக்கு எண்பது சதவிகிதம் வாய்ப்புள்ளது.



அடுத்து மம்தா பானர்ஜி, அம்மம்மா இந்த வங்காள அம்மா நடிப்பு, நம்மைச் சிலிர்க்க வைக்கிறது.  மன்மோகன் அமைச்சரவையில்
தாம் வகித்த ரெயில்வேத் துறையை, தம்வசமே
வைக்கவிரும்பி, தம்முடைய அல்லக்கை
திரிவேதியையே நியமிக்க வைத்து விட்டு,
கொல்கத்தா சென்று முதல்வராகி விட்டார்.


புதுபயபுள்ளையும், தன்னுடைய கன்னி பட்ஜெட்டை வைத்ததா இல்லை தனக்குத்தானே ஆப்பை வைத்ததா என்றுத்
தெரியவில்லை.  கடந்த பல வருடங்களாக
ஏற்றப்படாமல் இருந்த கட்டணத்தை சற்றே
உயர்த்தி மாற்றி அமைத்தார் இந்த திரிவேதி,
இதற்க்கு மக்களிடையே கூட அத்துணை
பெரிய எதிர்ப்பு வரவில்லை, மாறாக, பாராட்டு
வரும் என்று நினைத்திருந்த இடத்திலிருந்து
பிஞ்ச செருப்புகளுடன் மாலை வந்தது.  மம்தா
குதித்த குதி, நடுங்கிய திரிவேதி, புடுங்கியது பேதி....கவிதை மாதிரியில்லய்யா இருக்கு.  
டிக்கெட் கட்டணத்தை கூட்டுனாராம், அதற்க்கு
தண்டனையாய் அவரு ராசினாமா பண்ணனுமாம்,
இவங்க அந்தப் பதவிக்கு அவங்க இன்னொரு 
ஆளையே நியமிப்பாங்களாமாமாம் !  எம்மா,
எங்கம்மாவ விட பின்னுவீங்க போல, உங்களுக்கு ஆஸ்கர் வாய்ப்பு தொண்ணூறு
சதவிகிதமம்மா !

அடுத்து, நான் உங்களில் ஒருத்தி என்று அணு
உலை எதிர்ப்பாளர்களுக்கு அல்வா கொடுத்த
என் அம்மா, மீண்டும் மன்னிக்கவும் நம் அம்மா
நான் மேலே சொன்ன மூன்று பேரின் நடிப்பைக்
கூட, நாம் சமீபத்தில்தான் பார்க்க முடிந்தது, 
ஆனால்,  புரச்சித் தலைவியின் நடிப்பை 
நாம்தான் பலவருடங்களாக பார்த்து வருகிறோமே, அதிலும் அம்மையார் நடித்த
படங்களில் கோபம் அல்லது ஆவேசம் வரும்
காட்சிகளில் இரு உள்ளங்கைகளையும்
பிசைவதைப் பார்க்கவேண்டும், சோகத்திலும்
ஒரு கிளுகிளுப்பு வந்துவிடும், அப்பேற்பட்ட
நடிப்பு. 


அணுஉலை எதிர்ப்பு லகுட பாண்டிகளுக்கு அது தெரிய வேண்டாமா ?
இப்படியா ஏமாறுவது ?  உங்களில் ஒருத்தி
என்று இந்த வாயால் சொன்னீர்களே என்று
கேட்டால், 'அப்போ எலெக்ஷன், அது வேற வாய், இது நாற வாய்' என்பார்.  கண்துடைப்புக்கு நாங்களும் ஆராய்வோம்
உலையை என்று சட்டசபையில் தீர்மானம்
போட்டுவிட்டு, மூன்று பேர், மூன்று நாட்களில்,
மூன்று மணிநேரம் செய்த ஆய்வு அறிக்கையை ஏற்றுக்கொண்டு, கூடங்குள அணு உலை, ஈரேழு உலகிலும் மிக பாதுகாப்பானது என்று சொல்லி, 'யாரங்கே, மின்சாரம் உற்பத்தி உடனடியாக தொடங்கட்டும்' என்று அமைச்சரவையைக் 
கூட்டி, தீர்மானம் நிறைவேற்றச் செய்தார்.
ஒருபடி மேலேச் சென்று, கைது படலத்தையும்
இன்றே ஆரம்பித்தும் வைத்தார்.  சமூக நீதி
காத்த வீராங்கனையே, உங்களுக்கே ஆஸ்கர்
கிடைக்க நூறு சதவிகிதம் வாய்ப்புள்ளது தாயே, தமிழனுக்கு வாங்கித் தந்துவிடுங்கள் அம்மா !!!




                              -----முற்றும்-----  


















  












   




  

கருத்துகள்

  1. விழா நாயகர்கள் இன்று விருது நாயகர்களாக வளர்ந்து நிற்பதை பார்க்கையில் என் கண்கள் பனித்தன இதயம் கனத்தது!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!