சனி, 31 மார்ச், 2012

காமரசக் கவிதைகள்

புளி ரசம், தக்காளி ரசம் தெரியும், அதென்னய்யா காமரசம், அது எப்படி இருக்கும் எனும் பாலகர்களுக்கு, "தம்பி இது அடல்ட்ஸ் ஒன்லி, பதினெட்டு பூர்த்தியானதுக்கு அப்புறமாத்தான் வாசிக்கணும், ஏன்னா நான் என்னோட இளமை ஊஞ்சல்ல வேகமா ஆடிட்டு  இருந்தப்போ  எழுதின  அசைவக் கவிதைகள் இவை"

ஏப்ரல் ஒன்னு முட்டாள்கள் தினம் மட்டுமல்ல, இந்திய அரசு வரியை ஒழுங்காகச் செலுத்தும் தம்  வர்த்தக குடிமக்களை,  அன்றுதான் புது கணக்கு  ஆண்டை தொடங்கச் சொல்கிறது,   அதற்காக  ஆயூதபூஜைக்கு  அப்புறமா  மீண்டுமொருமுறை 
அலுவலகத்தை  சுத்தம்  செய்ய  ஆரம்பித்தேன்.  

பீரோவைக் குடைந்து பழையன கழிப்போமென குப்பைகளை
அள்ளி வெளியே கொட்ட எத்தனித்த போது,  மனைவிக்குப்
பயந்து,  அலுவலக  பீரோ  லாக்கரில்  அடுக்கி வைத்திருந்த
பழைய டைரிகள்  சரிந்து கீழே விழுந்தது,  ஒவ்வொன்றாய்
புரட்டி  வாசிக்க ஆரம்பித்ததும்,  உற்சாகத்தில்  சரேலென்று
வயது டீனேஜூக்குத் தாவிவிட்டது ! 

 1997 டைரி,  ஒரு பக்கத்தில் கவிதைகள்,  வாசித்துவிட்டு 
யார் எழுதியது  எனக்  கீழே பார்த்தால்,   'ராஜவாத்ஸாயனர்'  என்று போட்டிருந்தது.  யார் அந்த கவிஞர் ?
கேள்விப்பட்டதில்லையே  என்று  யோசித்தால், நினைவு  
வந்தவுடன் சிரிப்பு வந்தது உடன் வெட்கமும். 
ஹிஹி.....நானேதான் எனக்கு அப்படி ஒரு பட்டப் பெயர் சூட்டிக் கொண்டு ஜொள்ளை வடித்து வைத்திருந்திருக்கிறேன் !

பற்களை ஏன் இப்படி நறநற வென கடிக்கிறீர்கள் ?  
சீக்கிரம் பல் தேய்ந்துவிடும்,  கோவப்படாதீக !   கீழேயுள்ள இந்தக் கவிதைகள் எழுதி  பதினான்கு  வருடங்கள் ஆகி விட்டன, எனவே  நிறைய
கேள்விப்பட்டது  போன்ற  பிரமை  உங்களுக்கு  வந்தால்,
அதற்க்கு நான்  பொறுப்பில்லை,  மேலும் இதிலிருந்து
இன்னொன்றையும் நீங்கள்  புரிந்துக்  கொள்ளமுடியும், 
நான்  கவிப்பேரரசு வைரமுத்துவின் தீவீர அபிமானி என்று !   சரி, இனி இந்த ரசத்தை பருகுங்கள் !!!

---------------------------------------


மையிட்ட
உன் கண்ணுக்குள்
எனை எப்போதும் பூட்டிவை !

திகட்ட திகட்ட
உன் செவ்விதழால்
என் மேல் ஓவியம் சில தீட்டி வை !
----------------------------------------------------------


உன்னுள்ளே
எனைத் தேடும்
காலம் வாராதோ ?

இன்னமும்
தடுக்கும் இடர்களுக்கு
காலம் வாராதோ ?
-------------------------------------------------------------

உன்
பருவம் ஊற்றி
என்
தீயை அணை !

இந்தக்
காட்டாற்றை
கட்டுப்படுத்த
நீயே அணை !
-------------------------------------------------------------------

கட்டில் களம் தயார்
மோதட்டும் நம் படை !

நம்மிடையே வந்து செல்ல
இனி காற்றுக்கும் தடை !
----------------------------------------------------------------

பூத்துக் குலுங்கும்
இளமைத் தோட்டத்தின்
வள்ளல் நீ !

வாசம் நாடி
உன் வாசல் நாடி
வாடிக் கிடக்கும் யாசகன் நான் !
----------------------------------------------------------------------உன் கூந்தற் பரப்பில்
என் முகம் புதைந்து போகட்டும் !

உனைக் கூடிக் கூடி
என் உடல் வதைந்து சாகட்டும் !

வண்டாய் மாறி
உன்னுள் நுழைந்து
மது உண்ண வேண்டும்

உண்ட களைப்பில்
அங்கேயே மயங்கி
கிடக்க வேண்டும்

உன் மேனி முழுக்க
நான் முகர
ரோஜா வாசம் !

நான் மட்டுமே அதில் ஆள்வேன்
ஏனெனில் அது
ராஜா தேசம் !
-------------------------------------------------------------------------

உன் பாலாடை
மேனியின் மேலாடை நானே !

இனி
நூலாடை வீணே !பூப்படுக்கையில்
நாமிருவரும்
புரண்டுப் பிணைய
ஆசை !

பாவம்
யாருக்கு கேட்கும்
அந்தப் பூக்கள்
கதறும் ஓசை !
-----------------------------------------------------------------
பூவின் புலம்பல்
குங்குமத்தின் வழிசல்
லோலாக்கின் சிணுங்கல்
முத்துமாலையின் முணுமுணுப்பு
வளையல்களின் வம்பளப்பு
மேகலையின் பதைபதைப்பு
கொலுசுகளின் கும்மாளம்

முடிவாய்
உன்
என்
மூச்சுக் காற்று
மட்டும் !
-------------------------------------------------------------

                                   THE  END 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக