நூறு விழுக்காடு வாக்குப்பதிவாகுமா ?
100 விழுக்காடு வாக்குபதிவு எனில் நீங்கள் மகிழ்ச்சிதானே அடைவீர்கள் ? ஆனால் அப்படி ஒரு முழுப்பதிவு நடந்ததென அறிந்தால், அடுத்த நிமிடமே அத் தேர்தலை, தேர்தல் ஆணையம் ரத்து செய்து விடும், ஏன் ? ஏனெனில் 100 விழுக்காடு வாக்குப்பதிவு சாத்தியமேயில்லை. ஒரு தொகுதி, அது சிறியதாயிருக்கட்டும், பெரியதாயிருக்கட்டும், ராணுவப்பணியாளர்கள், காவல் துறையினர், தீயணைப்பு வீரர்கள், மருத்துவத் துறையினர், ரயில்வே, சாலைப் போக்குவரத்து, இன்ன பிற அத்தியாவசியப் பணியிலிருப்பவர்கள் வாக்களிக்க முடியாது. தபால் வாக்குகள் எல்லோருக்குமே சாத்தியமா என்பதில் சந்தேகமுள்ளது. இவர்கள் சில விழுக்காடு........ என் பக்கத்து வீட்டில் ஒரு முதிய தம்பதி. அவர்களுக்கு தங்கள் வாக்குகளைச் செலுத்த அளப்பரிய ஆசை. ஆனால் வாக்குச்சாவடி சென்று வரிசையில் நின்று வாக்களிக்கும் அளவிற்கு அவர்களிருவருக்கும் கால்களில் சிறிது கூடச் சக்தியில்லை. சரி வாருங்கள் என் வண்டியில் போய் வரலாம் என அழைத்தேன். ம்ஹூம், வண்டியில் ஏறி இறங்குமளவு கூட முழங்கால்கள் ஒத்துழைக்காது என மறுத்துவிட்டனர். வீட்டருகேயே எல்லாமும் கிடைத்துவ...