சனி, 25 பிப்ரவரி, 2012

கொலை செஞ்சு விளையாடுவோம் வாங்க !

நேற்றும், இன்றும்  வலைத்தளம் முழுக்க, நீதிமான் மனுநீதிச் சோழன் போல, எல்லா வலைத்தள மேதைகளும், ஒருசேரக் குற்றம் குற்றமே என்ற பாணியில், தமிழக அரசு ஐந்து அப்பாவிகளை(!) செய்த படுகொலைகளை படுபயங்கரமாய், கண்டித்து எழுதினர், எழுதினர், எழுதிக் கொண்டே இருந்தனர் ! அதிலும் ஒரு மாமேதை "பாவம் அவர்கள் துப்பாக்கிசூடு நடத்தியோ, யாரையும் அடித்தோ கூடக் கொள்ளையடிக்கவில்லையே, அந்தப் பிஞ்சுகளை ஏன் துடிதுடிக்கக் கொன்றீர்கள் ?"  என்று கேட்டு, நம்மை குலுங்கி குலுங்கி அழ வைத்தார் !   எனக்கு ஒருகணம், ஐயோ இந்த மேதைகள் எல்லாம் சிங்களத் தீவில் பிறந்திருந்தால், எம் தமிழ்மக்கள் கொத்துக்கொத்தாய் செத்திருக்கமாட்டார்களே ? என்று யோசித்தேன்.   

அப்போது பார்த்து என் நண்பன் அழைத்தான், எங்கள் உரையாடலின் இடையே மேதைகளின் கண்ணீரைத் தெரிவித்தேன், "மச்சான், அவனுங்களுக்கு 'எதிர்க்கட்சி' வேலடா, எந்த அரசு என்ன செஞ்சாலும் அதை எதிர்த்துட்டேதான் இருப்பாங்க, அவிங்களுக்கும் பொழுது போகனுமில்ல, ஒரு பேச்சுக்கு, இந்த அஞ்சி பேரையும் உயிரோடு பிடிச்சி காமிச்சா, 'பாரேன், எங்க நாம கலாய்ப்போமின்னுட்டு, எவனோ அஞ்சு அப்பாவிய புடிச்சி, கைகாச போட்டு சீன போடுறானுங்க, இவனுங்களாவது, புடிக்கிறதாவது ?'  அப்படின்னு நாள் பூரா புலம்பிருப்பானுங்க " என்றான், குழம்பிபோனேன்.


இன்னொருத்தர் ஒருபடி மேல போய், "இந்த என்கவுன்டர ஆதரிக்கிற  நாய்களுக்கும் ஒரு நாள் இதே ஆப்புதான்,  உங்க சாவுக்கும் நாங்கதாண்டா போராடணும்"  என்று ஏகத்துக்கும் கிலியை காட்டி வைத்தார் !


சரி எதற்கு வம்பு.....நானும் செம்மறிஆடுங்களப் போல இவிங்க டிக்கிய முட்டிக்கிட்டே பின்னாடி போயிடலாமுன்னுட்டு, 'போலிச கிழிச்சி தோரணம் கட்டிர்றது' ன்னு லேப் மேல டாப்ப தொறந்து கனெக்ட் பண்ணினேன், ஆனா, அப்பப் பாத்து என் ரியல் லைப் ஹீரோ 'சைலேந்திரபாபு' கண்ணுக்கு முன்னாடி வந்தாரு, போச்சு, எல்லாமே போச்சு, உங்கள்  ஆட்டு மந்தையிலிருந்து இந்த ஆடு பாதை மாற ஆரம்பித்தது !


சரி, நாம மேலிருந்தே கீழ போவோம், ஜெயா vs திரிபாதி , ஜனவரி 23 2012 பெருங்குடி, OMR ரோடு மினி சிங்கப்பூரு மாதிரி பளபளவென இருக்கும், பரபரப்பாய் இருக்கும் ஒரு மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதி, கார்ல மதியமா வந்த ஒரு முகமூடி கும்பல், பாக்யராஜ் ஒரு படத்துல செஞ்ச காமெடி சீன் மாதிரியே, துப்பாக்கி முனையில, பரோடா வங்கில இருந்த பத்து சொச்சப் பேர, ஒரு ரூமுக்குள்ள பூட்டி, கேஷியர மட்டும் மிரட்டி, 23 லட்சம் பணத்தைக் கொள்ளையடிச்சிட்டு, சாவகாசமா, ஆனா சாதுர்யமா எஸ்கேப் ஆயிர்றாங்க !  இது முதல் சம்பவம், சினிமாவுல அடிக்கடி பாக்குற சீனுதான் ன்னாலும், நெசத்துல நடந்ததில்லையா, மக்கள் நக்கல் பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.  நம்ம சிஎம் கோபத்த பத்தி உங்களுக்கு தெரியும், உள்துறை அம்மா வசம்தான் இருக்கு, ஏற்கனவே கரண்டுல வாய்க்காச் சண்ட, இந்த அழகுல, இவனுங்க பொண்ணு கையப் பிடிச்சி இழுத்த கதையாகிப் போச்சு இந்த சம்பவம் !
பாடாவதி சுப்பன், குப்பன் ஆபீசுலள்லாம் குளோஸ் சர்க்யுட் கேமராவ வெச்சிருக்காங்க, இந்த பரோடா வங்கி ஷேர் மார்க்கெட்டுல ஒரு ஷேர் ஆயிரம் ரூபாய்க்கு மேல போற பிரபலமான வங்கி, ஆனா கேமெரா கிடையாதாம், தூத்தேரி எந்தத் துப்புமே கிடைக்காத போலிசுக்கு, கிடைத்த ஒரே துப்பு அவனுங்க பேசுன இந்தி, அரைகுறைத் தமிழ் !
இந்த கொள்ளைக்கு உடந்தையாடா நீ ? என்கிற ரேஞ்சுக்கு ஒருத்தரை விடாம, ஏதும் பாவம் செய்யாத அந்தப் பலியாடுகள, போலிஸ் குடை குடையென குடைந்து டார்ச்சர் பண்ணித் தள்ளியது.  வெந்த புண்ணுல வேலப் பாச்சுன மாதிரி, ஆலுக்காசுல(திருப்பூர்) 12 கோடி கொள்ளை போகுது, அதே நாள்ல சென்னை கீழ்கட்டளைல IOB பாங்குல அதே பெருங்குடி ஸ்டைல்ல ஆபரேஷன், ஆனா முகமூடி கூட இல்ல, இந்த முறை லாக்கர் தொறக்க முடியாததால வெறும் 14 லட்சம் மட்டுமே சிக்குது, தூக்கிட்டு கொயந்தைங்க ஆம்னில அழகா பறக்குதுங்க !
இதே செம்மறி  ஆட்டுக்கூட்டமும், ஊடகமும், எதிர்கட்சியும், முன்னாள் ஆண்ட கட்சியும்,  ஓஓஓ.....வென கதறுது, சட்டம் ஒழுங்கு, அப்படின்னா என்ன ஆண்டி ? ன்னு சிதம்பரம் சிரிக்கிறாரு, ஜெயா நம்ம திரிபாதிய கூப்பிட்டு, வாட்ஸ் த ஹெல் கோயிங் ஆன் ஹியர் ? ன்னு, தான் சர்ச்பார்க் கான்வென்ட்ல படிச்சத கன்பர்ம் பண்ணுறாங்க, அப்போ சபதம் எடுக்கிறாரு நம்ம திரிபாதி, 'சாலே தும் சப்கோ ஹம் துக்கடே துக்கடே கரேங்கே' ன்னு !   


அப்புறமா, ஒரு மாபெரும் குழு இயங்க ஆரம்பிக்குது, கொள்ளை போன அந்த ரெண்டு டப்பா பாங்குலயும் CCC கேமரா இல்ல, ஆனா அக்கம்பக்கம் இருந்த மத்த வங்கிகள்ள கேமரா இருந்தது, போலீஸ் ஏற்கனவே இது பத்தின மிசன்ல இருந்ததால, ஒரு ஆளக் குறி வச்சு கிராபிக்ஸ் பண்ணி ஒரு போட்டோவ எல்லா நியுஸ் சேனல்லயும், நியுஸ்லயும் காட்டிக்கிட்டே இருக்காங்க 22 ம் தேதி பெப்ருவரி மதியத்துல இருந்து.


பொதுவா ஆம்பிளைங்க மட்டும்தான் நியுஸ் பாக்குறது வழக்கம், அப்பாவிக் கொயந்தைங்க பேட்லக் பாருங்க, அன்னிக்கு பாத்து அவிங்க பக்கத்து வீட்டுல இருக்கிற பொண்ணு அந்த நியுசப் பாக்குது, அவன் போட்டிருந்த சட்டைப் பாக்குது, இந்த ரெண்டு எழவையும் எங்கியோ பாத்திருக்கேனே என்றவாறே வெளிய வந்து பாத்தா கொடில அந்த சட்டை காஞ்சமானிக்கு காத்துல ஆடுது, எமன் கெளம்ப ரெடியானான் !


துப்பு கிடைச்ச கொஞ்ச நேரத்துலயே அதிரடி டீம் ரெடியாச்சு, 'அவனுங்கதான் டார்கெட்' னு தெரிஞ்சு போச்சு, ஆனா உயிரோடு பிடிக்கனுமா ? என்பதுதான் இப்போ பெரிய கேள்வி காவல்துறைக்கு !  சமீபத்துல இவ்வளவு அசிங்கமும், திட்டும், மன உளைச்சலும், உழைப்பும், வாழ்க்கைல எந்த சமயத்துலயும் இந்த போலிஸ்குழு பாத்ததே இல்ல, ஸ்காட்லான்ட் யார்ட் போன்ற சிறந்த போலிஸ்ன்னு பேர வாங்கிட்டு,  ஒரு துப்பு கூட கிடைக்கல, சந்தேகத்தின் பேருல கூட யாரையும் கைது பண்ண முடியல............  "@@@@ மவனுங்க எங்கிருந்தோ வந்துட்டு எங்க கண்ணுலயாடா விரல விட்டு  ஆட்டுறீங்க ?  என்கிற இந்த ஈகோ, அவங்களைப் பிணமா மட்டுமே கொண்டு போகணும்னு முடிவு பண்ணுது, என்னத்த சொல்லுறது, இவங்க ஒரு தடவ முடிவு பண்ணிட்டாங்கன்னா அப்புறம் அவுங்க பேச்ச அவுங்களே கேக்குறதில்லையாம் ! 


"இது தப்பா....ரைட்டா ?" மனித உரிமை ஆர்வலர் 
"தப்புதான்" பிரபல பதிவர் 
"அப்படின்னா அந்தப் போலீஸ்காரங்களுக்கு தண்டனை கொடுங்க" கேசு கிடைக்காத வக்கீல்
"சரி இந்தாப்பா போலிஸ் நீ ரெண்டுமாசம் சஸ்பென்ட், ஆக்சன் எடுத்தாச்சு" தமிழக அரசு. 
இத்தோட மேட்டர் ஓவர், ஆனா கைது பண்ணியிருந்தா, எப்படியும் ரெண்டு மாசத்துல ஜாமீன்ல வெளிய வந்துட்டு, பீகார் காட்டுக்கு ஓடிப் போயிட்டு, அங்கிருந்த மானிக்கே ஸ்கெட்ச்ச போட்டு, பல்க்கா தூக்குவான், அடுத்தமுறை கண்டிப்பா சுடுவான், அப்போ என்கவுன்டர எதிர்க்கிற ஒருத்தர் கூட செத்துப் போக 
வாய்ப்பிருக்கு !


சரி, நான் பாதை மாறிப் போக காரணமாயிருந்த நம்ம சைலேந்திரபாபு மேட்டரப் பார்ப்போம், கோவை மாவட்ட கமிஷனராய் கம்பீரமா செம்மொழி மாநாட்டை சக்சஸ் பண்ணிக் காமிச்சிட்டு, அக்கடான்னு ஓய்வு எடுக்கப் போனவரை, ஒரு ஆக்கங்கெட்ட கூவ, பத்து வயசு பிஞ்ச ருசி பார்க்க ஆசைப் பட்டு, கடத்திட்டு போயி, நாசமாக்கி, காவாயில வீசி கொன்னுடுச்சி, உடந்தையா ஒரு டிரைவர், ஒரு பாவமும் அறியாத அந்த பிஞ்சுப் பொண்ணோட தம்பியையும் கொன்னுபுட்டானுவ, இத இப்ப நான் எழுதறப்பவே எனக்கு வெறி ஏறுதே.....கருணாநிதிக்கும், கமிஷனருக்கும் எப்படி இருந்திருக்கும் ?  இருந்தாலும் அவனுங்கள மொதல்ல கைதுதான் பண்ணாங்க, அப்பப் பார்த்து, இங்க சென்னைல ஒரு கிட்நாப்பிங், அண்ணாநகர்ல, ரெண்டு கோடி கேட்டு, சரி, இந்த கிட்நாப்பிங் ட்ரெண்ட நசுக்கனும்னா ஒரேவழி அதுதான்னு, மொதல்ல அந்த மோகன்ராஜ் சொறிநாய சுட்டாங்க, ஆனா சென்னைல ரெண்டுகோடி கொடுத்து பொறி வச்சு ரெண்டு வாலிபப் பசங்களையும் சுடுவாங்கன்னு பார்த்தா சுடலை, கைது மட்டும் பண்ணாங்க, இப்ப ஜாமீன்ல வெளிய ஜாலியா இருப்பாங்க, உஷாரா இருங்க, அந்த அறியாப்பயலுவ, நம்ம புள்ளைங்கள ஸ்கெட்ச் போட வாய்ப்பிருக்கு !!!        


                     ---  முற்றும் --- 


   


   


2 கருத்துகள்:

 1. மனித உரிமை ஆர்வலர்: துப்பு கிடைச்சே ஒருமணி நேரம்தான் ஆவுது அதுக்குள்ளே ...
  போலிஸ்; என்ன ஒருமணி நேரம்தான் ஆவுது ?

  மஉஆ: இல்லப்பா ஏற்கனவே அவனுங்க ஓடமுடியாத ரூம்லதான் இருந்தாங்க...
  போலிஸ்: என்ன இருந்தாங்க?


  மஉஆ: அவனுங்க பொம்மை துப்பாக்கி தானே வைச்சிருந்தாங்க ?
  போலிஸ்: என்ன பொம்மை துப்பாக்கி தானே ?

  மஉஆ: அவங்களை நீ சுட்டு கொன்னியா?
  போலிஸ்: என்ன சுட்டு கொன்னியா? .... will continue until next encounter ...

  பதிலளிநீக்கு
 2. அற்புதம் சிவம், நிச்சயம் அப்படித்தான் அவர்கள் பதில் சொல்லப் போகிறார்கள், ஆனால் அரைகுறைப் படிப்பை வைத்துக் கொண்டு போடும் சொத்தைப் பிளானில், இந்தளவு அவர்களை(காவல்துறையை) நோகடிக்க முடியும் என்றால், வெறி கிளம்பத்தானே செய்யும், அரசு என்பது கட்டிபோட்ட வேட்டைநாய் மாதிரி, அது கட்டியிருக்குதேன்னு தூர நின்னு குச்சிய வச்சு சீண்டக்க்கூடாது, அப்புறம் கயிற அறுத்துட்டு வந்தாவது புடுங்கித்தான் வைக்கும், மனித ஆர்வலர் வந்து நாய் குரைக்கத்தானே செய்யனும், எப்படி கடிக்கப் போச்சுன்னு ? ன்னு கேட்டா என்னத்த சொல்லுறது ?

  பதிலளிநீக்கு