ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

இது என் மோகன்தாஸைப் பழித்த மலப்புழுக்களுக்கு !
சமீபத்தில் எங்கள் நண்பர் குழுவில் ஒரு பெரிய விவாதம் போய்க்கொண்டிருந்தது, இதுதான் காந்தியின் மறுபக்கம் என்று ஓர்  அல்லக்கை (RANGEELA GANDHI & KYA GANDHI MAHATMA THE -By
Dr .L .R .BALI )  எழுதியதில் இருந்து ஒரு லிங்க், ஏற்கனவே தம் சுய சரிதையான 'சத்தியசோதனை' நூலில் வெளிப்படையாய் சொல்லியிருந்ததையே எடுத்து , ஆங்காங்கே கொஞ்சம் லேட்டஸ்ட் லொள்ளுகளையும் கலந்து கொட்டி எழுதியிருந்தது !


ஆனால், ஓர் உயர்ஜாதி இந்துவான மோகன்தாஸ், தலித்துகளை தவிர்த்தே வந்தார், அல்லது ஏமாற்றினார்,  என்று எழுதிய சில மலப்புழுக்களுக்காகவே இந்தக் கட்டூரை !  கீழே அந்த நாற்ற இணைப்பை கிளிக் செய்து படித்து  துன்புறலாம் / இன்புறலாம்(?)

 (http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fmathimaran.wordpress.com%2F2012%2F02%2F06%2F502a2F&h=mAQEwzTnRAQE2FzPS9iSnm8ufRcrYz4czhdLgs U7M317Snw&enc =AZNqIWY6p_vNewTRP8XVwv Y01OKGr_ZQ4xd_4aSFfk_FoZP170L4R1eKqv_M0DBRj_5jJXAsU3SpIcx-bd01s_BCZbQqX-LiW5pWVzon0GvmGSNISTWj_asiXxj0s7bTL00)

இதோ கீழே, காந்தி தமிழகம் வந்தபோது  நடந்த  உண்மை 
சம்பவங்களைப் பாருங்கள்......இதெல்லாம் கதையல்ல என்பதை மட்டும் உணருங்கள் !

அண்ணல் காந்தியடிகள் குற்றாலம் சென்றபோது, அருவியில் குளித்துவிட்டு, குற்றாலநாதர் ஆலயத்துக்கு  வழிபடச் சென்றார்.  அந்த ஆலயத்தில் ஜாதி இந்துக்கள் மட்டும்தான் வழிபட முடியும் என்பதைக் கேள்விப்பட்ட மகாத்மா கோயிலுக்குள் நுழைய மறுத்துவிட்டார்.  ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் எல்லோரும் செல்லும்போதுதான் அது  கோயில், இல்லையென்றால் அது வெறும் கல்மண்டபம்தான் எனக்கூறி திரும்பிவிட்டார் !


மதுரையிலும் ஹரிஜனங்களுக்கு மீனாட்சி அம்மன் ஆலயத்தில் வழிபட அனுமதி இல்லை என்று கேள்விப்பட்ட மகாத்மா காந்தி, 'எப்போது ஜாதி வேறுபாடு இன்றி எனது ஹரிஜன் சகோதரர்களும், எல்லோரையும் போல இந்த ஆலயத்தில் அனுமதிக்கப்படுகிறார்களோ அதற்குப்  பிறகுதான் நான் இந்தக் கோயிலில் நுழைவேன்" என்று சூளுரைத்துவிட்டு சென்று விட்டார்.  1936 -ம் ஆண்டு சென்னை மாகாணத்தில் நடைப்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற ராஜாஜி பிரதமரானார். அப்போதுதான் ஆலயப் பிரவேசச் சட்டம் இயற்றப்பட்டது.

மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கும் விதத்தில் இந்தக் காலகட்டத்தில் தான் மதுரையில் ஆலயப் பிரவேசம் நடக்கிறது.


                                                                                                  மதுரை மீனாட்சி அம்மன் ஆலயப் பிரவேசத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் முழுமையான ஆதரவும், பக்கபலமும் இருந்தது.  அப்போது காந்தியின் சீடராய் மதுரையில் இருந்த வைத்தியநாத ஐயரின் தலைமையில் மீனாட்சி அம்மன் கோயில் பிரவேசம் நடைபெறுவதாய் இருந்தது.   ஆனால் இதை எதிர்த்த கூட்டம் சாதாரணமானது அல்ல, 'எதிர்ப்பாளர்களின் கிளர்ச்சியை முறியடிப்போம், ஆலயப் பிரவேசத்துக்கு ஆதரவளிப்போம்' என்று தேவர் அறிக்கை வெளியிட்டார்.  அந்த அறிக்கையும், மீனாட்சியம்மன் கோயில் யானையும் மட்டுமே, வைத்தியநாதர் அய்யர் தலைமையில் ஆலயத்தில்  நுழைந்த  ஹரிஜன சகோதரர்களுக்கு ஆதரவாய் இருந்தன !


தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக உயர்சாதி இந்துக்களுக்கு அறைகூவல் விடுத்தபோதுதான், காந்திஜி மகாத்மாவானார் !


தாழ்த்தப்பட்டவர்களை உயர் ஜாதியினருக்கு எதிராகப் போராடுங்கள் என்று தூண்டிவிட்டு, அதில் குளிர்காயாமல், உயர் ஜாதியினரைத் 
தாழ்த்தப்பட்டவர்களை சமுதாய நீரோட்டத்தில் இணைக்க வற்புறுத்தி வெற்றியும் பெற்றதுதான் மோகன்தாஸ் காந்தி, மகாத்மா காந்தியானதற்க்குக் காரணம்.  அவரின் அந்தப் போராட்டம்தான், முயற்சிகள்தான், அதன் பிறகு வந்த தலித் இயக்கங்களுக்கு அடித்தளமாக அமைந்தது.  


(-நன்றி இது, 'தினமணி' ஆசிரியர் கோ.வைத்தியநாதன், மதுரை 
வைத்தியநாத அய்யர் 57 வது  நினைவுநாள் நிகழ்ச்சியில் சொற்பொழிவாற்றியது


  
உண்மை நிலைமை இவ்வாறிருக்க, ஏன் இந்தப் புழுக்கள் இத்துனை துவேஷத்தை என் மோகன்தாஸ் மேல் காட்டுகிறது ?  மோகன்தாஸ் இருந்த ஒரே காரணத்தினால்தானே சுதந்திரப் போர் ஒற்றுமையாக நிறைவேறியது ?  உலகமே மதித்தாலும், உள்ளூரில் அந்தப் புழுக்களைப் போல சில துவேஷிகள் இருந்ததினால்தானே, கோட்சே வால், அந்தப் புனிதரை கொல்ல முடிந்தது ?

காந்தி இந்துவெறியர் என்றால் ஏன் ஓர் இந்துவால் கொல்லப்பட்டார் ?

காந்தி ஜாதிவெறியர் என்றால் புழுக்கள் நீங்கள் ஏன் 'பிராமிண' மாயையில் இருந்து இன்னும் மீளவில்லை ?

மலப்புழுக்கள் நாம் உண்ட உணவையே உண்டு நமக்கே வயிற்று வலியை உண்டு பண்ணும், அதைத்தான், அந்த வலியைத்தான் மோகன்தாஸ் பக்தர்கள் நாங்கள் அனுபவிக்கிறோம் 
இந்த மலப்புழுக்களால் !!!  
                             ---   போதும்   ---