வியாழன், 23 பிப்ரவரி, 2012

பிறழ்வு

வெட்கம் பிடுங்கித் தின்கிறது
சுற்றுமுற்றும் பார்க்கிறேன்
கூட்டம்கூட்டமாய் மக்கள்வெள்ளம் 


கல்லூரிமுடிந்து செல்லும் கன்னியர்
அவருக்கு சமைக்கணுமே என ஓடும் மங்கையர்
போயிருப்பாளோ வென பதைத்தபடி செல்லும் விடலையர் 


என்னைப்போலவே ஒரு சொறிநாய்
என்னைப்போலவே ஒரு பொலிகாளை
என்னைப்போலவே ஒரு சேற்றுப்பன்றி


நிற்கிறேன் நடக்கிறேன் ஓடுகிறேன் 
இதுவரை யாரும் என்னைப் பார்க்கவில்லை
பார்த்துவிட்டால் இவ்வுலகில் எனக்கு வேலையில்லை


நிர்வாணமாய் நானிருக்கிறேன்
மானம் மறைக்க ஆடைதேடி விழியால் மேய்கிறேன்
பொட்டுத் துணியில்லை அக்கம்பக்கம்


வழக்கம்போல் சூழ்கிறது இருள்
பாய்ந்து பதுங்குகிறேன் மறைவொன்றில்
தற்காலிகமாய் கிடைக்கிறது  விடுதலை 


எப்போதும் போல் விழிக்கிறேன் தாமதமாய்
எழுந்தவுடன் பார்த்தால் விலகியிருந்தாலும் கைலியிருந்தது
ஏன் வருகிறது இந்தக் கனவு அடிக்கடி ?2 கருத்துகள்:

  1. என்னைப்போலவே ஒரு சொறிநாய்
    என்னைப்போலவே ஒரு பொலிகாளை
    என்னைப்போலவே ஒரு சேற்றுப்பன்றி// நல்ல உவமானம்! கனவுகளின் புரியாத புதிருக்கு பொருத்தமான வரிகள்!

    பதிலளிநீக்கு