பொறுத்தருள்க !!!

மனிதன், தோல்வியையோ/துரோகத்தையோ/ ஏமாற்றத்தையோ, சந்திக்காதவரை நல்லவனாகத்தான் இருக்கிறான்.  அறத்தையே கூறுகிறான்,  சொல்வதையே செய்கிறான்.

எதிர்பாராத வேளையில் வரும் 'துன்பம்' அவனை முடக்க முயல்கிறது.  'வருமுன் காப்பவன்தானே அறிவாளி' எனும் வினாவையே கூட முட்டாளாக்கும் துன்பங்களுமுண்டு,  அது அவனை மேலும் பிதற்ற விடாமல் தலையில் குட்டி, அமர வைக்கிறது.

ஆடும் எவருமே அடங்கத்தான் வேண்டுமெனினும், அடங்கலைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் ஆடும் கர்விகளை, இத்தகைய தற்காலிக 'இன்னல்கள்' ஆட்சி செய்து, 'மாதிரி' அடங்கலை உணரச்செய்து விடுகிறது.

'இதும் போம்' என்று பல்லைக் கடித்து வலி தாங்கலாம்தான், ஆனால் அது இன்னும் பிதற்றலைக் கூட்டி சத்தத்தை அதிகரித்துவிடும்.  அப்படி மட்டும் ஆகிவிட்டால், அடுத்த 'அடி' சற்று பலமாய் விழக்கூடும்.

இன்னல் பருகிய மாத்திரத்தில் இதை உள்வாங்கி விட்டால், உளறல்கள் குறைந்து, நிதானக் காற்று மெல்லியதாய் வீசும். 

இனி பிதற்றல்களைக் குறைத்துக் கொண்டு, மென்மையாய் மட்டுமே தவழ விரும்புவேன், பொறுத்தருள்க :))



கருத்துகள்

  1. மண்டைக்காக ரொம்பப் பிதற்றிவிட்டீர்களோ பாஸ்:)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!